close
Choose your channels

13 ஆண்டுகளுக்கு பின் பிகினி உடையில் அனுஷ்கா ஷெட்டி: திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Monday, October 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையரங்கில் அனுஷ்கா ஷெட்டியை பிகினி உடையில் பார்த்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி கொண்டாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, நமிதா, ஹன்சிகா நடித்த ’பில்லா’ திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் ரிலீஸ் ஆனது. இந்த படம் 2007ஆம் ஆண்டு தமிழில் அஜீத் நடிப்பில் வெளியான ’பில்லா’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை அள்ளி குவித்த நிலையில் நேற்று பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படம் 4K தொழில்நுட்பத்தில் மீண்டும் ரிலீஸ் ஆனது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள பல திரையரங்குகளில் இந்தப் படம் சிறப்பு காட்சியாகவும் அதிகாலை காட்சியாகவும் வெளியானது என்பதும் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க தியேட்டர் முன் குவிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த படத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி பிகினி உடையில் வரும் போது திரையரங்குகளில் ரசிகர்கள் கோஷம் எழுப்பிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 13 ஆண்டுகளுக்குப் பிறகும் ’பில்லா’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதை பார்த்து திரையுலகினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment