13 வருடங்களுக்கு பின் விஜய் படத்தில் இணையும் பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
13 வருடங்களுக்கு முன்னர் விஜய் நடித்த படத்தை இயக்கிய பிரபலம் ஒருவர் தற்போது விஜய்யின் ’தளபதி 66’ படத்தில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, சங்கீதா, ஜெயசுதா, சம்யுக்தா உள்ளிட்டோர் இணைந்து உள்ளனர் என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் இந்த படத்திற்கு இசை அமைத்து தமன் இந்த படத்திற்காக 6 பாடல்கள் கம்போஸ் செய்ய இருப்பதாகவும் அதில் ஒரு பாடல் ’அரபிக்குத்து’ பாணியில் செம டான்ஸ் ஆடும் பாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த பாடலுக்கு பிரபல நடன இயக்குனர் பிரபுதேவா நடன இயக்குனராக பணி புரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் நடித்த ’வில்லு’ என்ற திரைப்படத்தை கடந்த 2009ஆம் ஆண்டு இயக்கிய பிரபுதேவா, தற்போது 13 ஆண்டுகள் கழித்து ‘தளபதி 66’ படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com