11 வருடங்களுக்கு பின் மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் த்ரிஷா

  • IndiaGlitz, [Thursday,March 21 2019]

பிரபல இயக்குனர் ராதாமோகன் கடந்த 2008ஆம் ஆண்டு இயக்கிய 'அபியும் நானும்' திரைப்படத்தில் நடித்த த்ரிஷா, மீண்டும் 11 வருடங்களுக்கு பின் தற்போது ஒரு படத்தில் ராதாமோகன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆகிய அமிதாப் , டாப்சி நடித்த 'பாட்லா' என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படத்தை ராதாமோகன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'துமாரி சூலு' என்ற இந்தி படத்தின் ரீமேக்காக 'காற்றின் மொழி' படத்தை ராதாமோகன் இயக்கினார் என்பதும் அந்த படம் வசூல் அளவில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'பாட்லா' ரீமேக்கை இயக்கவுள்ள ராதாமோகன், இந்த படத்தில் டாப்சி கேரக்டரில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.