9 வருடங்கள் கழித்து கமல்ஹாசனின் மலரும் நினைவுகள்.. பூஜா குமார் வெளியிட்ட க்யூட் வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,April 20 2024]

நடிகை பூஜா குமார் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசனுடன் நடித்த படத்தில் உள்ள ஒரு காட்சியை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து உள்ளார்.

தமிழ் திரையுலகில் கடந்த 2000 ஆண்டு பூஜாகுமார் அறிமுகமானாலும் கமல்ஹாசனின் ’விஸ்வரூபம்’ மூலம் தான் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ’விஸ்வரூபம் 2’ ’உத்தம வில்லன்’ ’மீன் குழம்பும் மண்பானையும்’ போன்ற படங்களில் கமல்ஹாசன் உடன் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ’உத்தம வில்லன்’ திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் அந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் பூஜா குமார் ஆகிய இருவரும் நடிகர் நடிகையாக நடித்திருப்பார்கள் என்பதும் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’உத்தம வில்லன்’ படத்திற்காக கதகளி டான்ஸ் ஆடிய காட்சி வரும் நிலையில் அந்த காட்சிக்காக மேக்கப் போடும் வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். கதகளி டான்ஸர் ஒருவரே தன்னை கதகளி நடன கலைஞராக மாற்றும் மேக்கப் போட்டுக் கொடுத்ததாகவும் அந்த படத்தில் அந்த காட்சியை தான் மிகவும் ரசித்து செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்த வீடியோவையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

More News

விஜய்க்கு நிபந்தனை விதித்தாரா பிரேமலதா? என்ன காரணம்?

தளபதி விஜய்க்கு விஜயகாந்த் மனைவி பிரேமலதா நிபந்தனை விதித்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்க்கு போட்டி அஜித் இல்லை, விஷால் தான்.. அதிரடியாக ரிலீஸ் ஆகும் 2 படங்கள்..!

அஜித் மற்றும் விஜய் தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருந்தாலும் தொழில் முறையில் இருவரும் தான் போட்டியாளர்களாக உள்ளனர் என்பதும்  இரு தரப்பு ரசிகர்களும் அவ்வப்போது

சர்ப்ரைஸ் அறிவிப்பு.. உருவாகிறது 'பிரேமலு 2'.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் 'பிரேமலு' மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்ததாகவும்

தேர்தல் முடிந்த சில நிமிடங்களில் வெளியான அறிவிப்பு.. கமல் கட்சியில் இருந்து விலகிய பிரமுகர்..!

தமிழகத்தில் தேர்தல் முடிந்து ஒரு சில  நிமிடங்களில் கமல் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகி வெளியேறி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லண்டனில் இருந்து சென்னைக்கு வாக்களிக்க வந்த நபர்.. விஜய் படக்காட்சி மாதிரியே ஏற்பட்ட சோகம்..

லண்டனில் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்து சென்னைக்கு ஓட்டு போட வந்தவருக்கு விஜய் படத்தில் நிகழ்ந்த காட்சி மாதிரியே ஏற்பட்ட சோகம் குறித்த செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.