'விடாமுயற்சி'யை அடுத்து அஜித்தின் அடுத்த படத்திலும் த்ரிஷா.. வேற லெவல் தகவல்..!

  • IndiaGlitz, [Monday,September 02 2024]

அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ திரைப்படத்தில் அவருடைய மனைவியாக நடிகை த்ரிஷா நடித்துள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படத்திலும் த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் நடிகை த்ரிஷா நடித்த பின்னர் அவர் தொடர்ச்சியாக பல தமிழ், தெலுங்கு மலையாள பிரபலங்களுடன் நடித்து வருகிறார்.

குறிப்பாக அஜித்துடன் ’விடாமுயற்சி’ சிரஞ்சீவி உடன் ’விஸ்வாம்பரா’ கமல்ஹாசன் உடன் ’தக்லைஃப்’ மோகன்லால் உடன் ’ராம்’, டொவினோ தாமஸ் உடன் ‘ஐடென்டிட்டி’ ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் விஜய் நடித்துள்ள ’கோட்’ திரைப்படத்திலும் ஒரு சின்ன கேரக்டர் மற்றும் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜீத் நடித்து வரும் ’குட் பேட் அக்லி’ என்ற திரைப்படத்தில் த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருப்பதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் ஹைதராபாத்தில் நடைபெற இருக்கும் நிலையில் அப்போது அஜித், த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் அஜித் மற்றும் த்ரிஷா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News

'புஷ்பா 2' ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம்.. இந்திய திரையுலகில் முதல் முறை..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று வாங்கியதாகவும் இந்திய திரை உலகில் இதுவரை எந்த

ஆத்தா மாதிரி நீயும் அவிசாரின்னு பேர் எடுக்கனும்ன்னு நினைக்கிறியா? 'கோழிப்பண்ணை செல்லத்துரை' டிரைலர்..!

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகிய 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கார்த்திகை தீபம் தொடரில் திடீர் திருப்பம்.. நாயகிக்கு இரட்டை வேடமா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற தொடரில் கார்த்திக் ராஜ் மற்றும் ஆர்த்திகா நடித்து வரும் நிலையில் இந்த தொடரில் ஆர்த்திகா இன்னொரு கேரக்டரில் நடித்து

எனக்கு தளபதி மாமா, இளையதளபதிக்கு நா மாமா - GOAT கதையை உளறிய பிரேம்ஜி

" எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ணமாட்டோமா " என்ற புகழ்பெற்ற வசனத்தின் நாயகன், இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி ஆவார்.

முருகன் அருள் பெற்ற 6 வயது சிறுமி தியா: பக்தி பாடல்களால் மனதை கொள்ளை கொள்ளும் குழந்தை

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் வெளியாகியுள்ள புதிய வீடியோவில், முருகன் அருள் பெற்ற 6 வயது சிறுமி தியாவின் அற்புதமான பக்தி பாடல்கள் மற்றும் அவரது வாழ்க்கை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.