அசாம் மாநிலத்தில் பரவிவரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்!!! கொத்துக் கொத்தாக செத்து மடியும் பன்றிகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் ஆப்பிக்கப் பன்றிக்காய்ச்சல் நோய்த்தொற்று முன்னெப்போதும் பரவாத நிலையில் தற்போது அசாம் மாநிலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அசாம் மாநிலத்தில் ஆப்பிக்கப் பன்றிக்காய்ச்சல் நோய்த்தொற்றால் பல ஆயிரக்கணக்கான பன்றிகள் இறந்துவிட்டன. தற்போது கொரோனா பரவல் நேரத்தில் விலங்குகளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதால் மக்களிடமும் பரபரப்பு அதிமாகியிருக்கிறது.
ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் பாதிக்கப்பட்ட பன்றிகளை கொன்றுவிடுமாறு மாநில கால்நடை துறைக்கு மத்திய அரசு பரிந்துரைத்து செய்திருக்கிறது. இதை அசாம் மாநிலத்தின் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அமைச்சர் அதுல் போரா நேற்று உறுதிப்படுத்தினார்.
முதலில், போபாலில் ஆயிரக்கணக்கான பன்றிகள் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட செய்திக்குப் பின்னர் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையில் உள்ள சீனாவின் பகுதிகளில் இருந்து இந்த நோய் 2019 நவம்பர் – டிசம்பர் மாதங்களில் பரவியது எனவும் அதுல் போரா தெரிவித்துள்ளார். இதன் தாக்கம் அதிகமாகி ஏப்ரல் மாதத்தில் அசாமின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான பன்றிகள் இறக்கத் தொடங்கியிருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இதுவரை 2,500 பன்றிகள் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது விலங்குகளைப் பாதித்துள்ள இந்த பன்றிக்காய்ச்சல் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே பன்றி பண்ணைகளில் வேலை செய்த பணியாளர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளை நான்கு மண்டலங்களாகப் பிரித்து அவற்றை கொல்லும் நடவடிக்கைகளில் கால்நடைத் துறை ஈடுபட்டு வருகிறது. அசாமின் பல பகுதிகளில் விவசாயிகள் பன்றிகளையும் சேர்த்து வளர்த்து வருகின்றனர். பல பெரிய பன்றி பண்ணைகளிலும் இந்நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய்த்தொற்றால் ஏற்படும் இழப்பீட்டை குறித்து விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள அச்சத்தால் நோய்த்தொற்று மனிதர்களை தாக்குமா என்கிற ரீதியிலும் ஆய்வுகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments