அசாம் மாநிலத்தில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலா??? விளைவுகள் குறித்து விஞ்ஞானிகள் கவலை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அசாம் மாநிலத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவதாகப் பரபரப்பு கிளம்பியது. இது மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தாது என்றாலும் தற்போது அசாம் உள்ளிட்ட பல்வேறு மாகணங்களில் ஆயிரக்கணக்கான பன்றிகள் இந்நோய்த்தொற்றால் உயிரிழந்து வருகின்றன. இதனால் பன்றி இறைச்சி ஏற்றுமதி மற்றும் உற்பத்தி கடுயைமாகப் பாதிக்கப் பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் இந்த வகை வைரஸ் பரவுவது இதுவே முதல் முறை என்பதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியிருந்தனர். தற்போதுவரை அசாம் மாநிலத்தில் 17 ஆயிரம் பன்றிகள் கொல்லப்பட்டு இருக்கின்றன. காரணம் இந்நோய்த்தொற்றுக்கு முழுமையான தடுப்பூசி மருந்து எதுவும் கிடையாது. இந்நோயின் அறிகுறிகள் கிளாசிக்கல் ஸ்வைன் ஃப்ளூ போன்று இருந்தாலும் தென்ஆப்பிரிக்கா பன்றிக் காய்ச்சலின் தன்மை முற்றிலும் வேறாக இருக்கிறது என்றும் கிளாசிக்கல் ஸ்வைன் ஃப்ளூ தடுப்பு மருந்தை இந்நோய்க்கு பயன்படுத்த முடியாது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
வடமாநிலங்களில் இந்நோய் பாதிப்பை குறைப்பதற்காக தற்போது மத்திய அரசு பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவித்து இருந்தது. மத்திய அரசின் இந்த முடிவிற்கும் அசாம் மாநில அரசு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு இருக்கிறது. காரணம் இது தொற்றுநோய் பாதுகாப்பு நடவடிக்கையை குறைத்துவிடும் எனவும் கருத்துக் கூறப்படுகிறது. தற்போது அசாம் மாநிலத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தீவிரம் அடைந்து வருவதால் உயிரிழப்பு 100 விழுக்காடாக அதிகரித்து இருக்கிறது என்றும் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.
நோய் பாதித்த விலங்குகளிடம் இருந்தோ அல்லது கழிவுபொருட்கள், தீவனம், குப்பை, சுகாதாரமற்ற முறைகளினால் பன்றிகளுக்கு இந்நோய் பரவுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். காய்ச்சல், மனசோர்வு, ரத்தகசிவு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை முதலில் ஏற்படுத்தும் இந்நோய்த்தொற்று மிக விரைவிலேயே விலங்குகளுக்கு மரணத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சீனாவில் இந்நோய் பாதிப்பு ஏற்பட்டதால் 1 லட்சத்திற்கும் அதிகமான பன்றிகள் இறந்ததாகத் தகவல் கூறப்படுகிறது. தற்போது இந்தியாவிலும் அதேபோன்ற நிலைமை ஏற்படுமோ என அச்சம் எழுந்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout