விடிய விடிய போதை… நள்ளிரவில் விபச்சாரம்… கூட்டமாகச் சிக்கிய வெளிநாட்டு பெண்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெங்களூர் பகுதியில் இயங்கிவந்த மதுபான விடுதியில் 25 வெளிநாட்டு பெண்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதோடு விபச்சாரத்திலும் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்திவருவதாகக் கூறப்படும் தகவல் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பெங்களூர் எம்.ஜி ரோட்டியில் ஏராளமான மதுபான விடுதிகள் இயங்கி வருவதாகவும் இதில் அவ்வபோது போதைப்பொருள் பயன்படுத்துவது, விபச்சாரத்தில் ஈடுபடுவது போன்ற குற்றச்சாட்டுகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் எம்.ஜி ரோட்டியில் இயங்கிவந்த மதுபான விடுதி ஒன்றில் முறைகேடான சம்பவங்கள் நடைபெறுவதாக கப்பன் பூங்கா போலீஸாருக்கு தகவல் வந்திருக்கிறது.
இதையடுத்து மத்திய மண்டல உதவி போலீஸ் கமிஷனர் சீனிவாச கவுடா தலைமையில் 60 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் 3 குழுக்களாக பிரிந்து செயல்பட்ட அவர்கள் பிரிகேட் சாலை, எம்.ஜி.ரோடு மெட்ரோ, சர்ச் சாலை போன்ற இடங்களை முடக்கி அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையில் மதுபான விடுதி ஒன்றில் பல வெளிநாட்டு பெண்கள் போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை அருந்திக் கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் சிலர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதிலும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பலர் இந்த மதுபான விடுதியில் இருந்த நிலையில் அவர்களை போலீஸார் கைது செய்ய முற்பட்டபோது அவர்கள் தப்பிக்க முயன்றுள்ளனர்.
அவர்களில் 26 பேரை போலீஸார் கைது செய்த நிலையில் ஒருவரைத் தவிர மற்ற 25 பேரும் ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம் பெண்கள் என்றும் அவர்கள் போதைப்பொருள் மற்றும் விபச்சாரம் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் காரியங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட் மற்றும் வீசாக்களை போலீஸார் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தென்னாப்பிரிக்க பெண்கள் அனைவரும் தற்போது போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பெங்களூர் பகுதிகளில் இயங்கிவரும் மதுபான விடுதிகளில் அவ்வபோது போதைப்பொருள் விருந்துகள் நடைபெறுகிறது என்றும் இதை கட்டுப்படுத்தும் முயற்சியில் காவல் துறை ஈடுபட்டு வருவதாகவும் உதவி போலீஸ் கமிஷனர் சீனிவாச கவுடா தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout