'ஆப்பிரிக்கா காட்டுப்புலி': 'ஆளவந்தான்' படத்தின் இன்னொரு மாஸ் பாடல் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Wednesday,November 29 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான ‘ஆளவந்தான்’ திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் டிஜிட்டலில் மீண்டும் வரும் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகியது. இந்த நிலையில் சற்றுமுன் இன்னொரு பாடலின் வீடியோவும் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’ஆப்பிரிக்கா காட்டு புலி’ என்று தொடங்கும் இந்த பாடலை வைரமுத்து எழுதியுள்ளார் என்பதும் நந்தினி ஸ்ரீதர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த பாடலின் முழு லிரிக்ஸ் இதோ:

ஆப்பிரிக்கா காட்டு
புலி ஆள் தின்னும் வேட்டை
புலி

ஆப்பிரிக்கா காட்டு
புலி ஆள் தின்னும் வேட்டை
புலி முன் ஜென்மம் மோப்பம்
தேடி அலையுதே

பாட்டு பாடி
முடிய முன்னே வேட்டை
ஆடி முடிக்கணுமே தீ பறக்கும்
கண்களோடு தேடுதே

ஆப்பிரிக்கா காட்டு
புலி ஆள் தின்னும் வேட்டை
புலி முன் ஜென்மம் மோப்பம்
தேடி அலையுதே

பாட்டு பாடி
முடிய முன்னே வேட்டை
ஆடி முடிக்கணுமே தீ பறக்கும்
கண்களோடு தேடுதே

முன் ஜென்மத்தில்
புல் மேயும் மானாக வந்தேன்
புலியாக நீ வந்து என்னை ஏன்
கொன்றாய்

அப்போது இரையாவும்
மானாய் வந்தேன் இப்போது
இரை தேடும் புலியாய் வந்தேன்

நீ ஆகாயம்
சென்றாலும் பழி
வாங்குவேன் உன்
ரத்தத்தை கொண்டு
செவ்வானம் செய்வேன்

இன்றேனும்
என்றேனும் ரெண்டாக
கொண்டாடி கொன்றால்
தான் என் கோபம் மாறுமே
யுத்தத்தில் நான் வென்று
ரத்தத்தில் நீராடி புலி வடிவம்
பூவாக மாறுவேன்

கண்டேன் கண்டேன்
பாவத்தின் பிம்பம் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
கொன்றாட சபதமும் கொண்டேன்

நரசிம்ம அவதாரம்
அன்று அன்று புலி கொண்ட
அவதாரம் இன்று இன்று

கண்ணோடு நான்
கொண்ட கோபம் கண்டு
காற்றெல்லாம் மின்சாரம்
பாயும் இன்று மன்றாடி
பார்த்தாலும் கொன்றாடி
தீர்த்து விட்டு இன்றோடு
இவ்வடிவும் நீங்குவேன்

முன் ஜென்மம்
வாழவில்லை பின் ஜென்மம்
தூங்கவில்லை இன்றிரவு
நிம்மதியில் தூங்குவேன்