பறக்கும் விமானத்தில் இருந்து கீழே விழுந்தார்களா? அதிர்ச்சி வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,August 17 2021]

சமீபத்தில் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து திரும்பிய நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கை ஓங்கியது என்பதும் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்பட நாடு முழுவதும் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் நாட்டை விட்டு தப்பி ஓடி தப்பியதை அடுத்து தாலிபான்கள் தலைமையில் புதிய அரசு விரைவில் அந்நாட்டில் அமையவுள்ளது. இந்த நிலையில் தாலிபான்களின் ஆட்சியில் வாழ விரும்பாத பொதுமக்கள் பலர் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக ஆப்கான் தலைநகர் காபூல் நகரில் விமானத்திற்கு காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விமானம் வந்தவுடன் பேருந்து ரயில்களில் ஏறுவது போல் விமானத்திலும் புட்போர்டில் பயணம் செய்ய பலர் முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இணையதளங்களில் வெளியான ஒரு வீடியோவில் படியிலும் சக்கரத்தில் நின்றுகொண்டு விமானத்தில் பயணம் செய்த மூவர் நடுவானில் இருந்து கீழே விழுந்ததாகவும் அவர்கள் பரிதாபமாக பலியானதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.