ஆப்கனில் இருந்து வெளியேறிய பெண்ணுக்கு நடுவானில் பிரசவம்!
- IndiaGlitz, [Sunday,August 29 2021]
ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்நாட்டிலுள்ள வெளிநாட்டினர் மட்டுமின்றி உள்நாட்டினர்களும் வெளியேறி வருகின்றனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் 24 மணி நேரமும் மக்கள் கூட்டம் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆப்கனை நாட்டை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் பிரிட்டனுக்கு சென்று கொண்டிருந்தபோது நடுவானில் பிரசவம் நடந்துள்ளதாக வெளிவந்துள்ளது
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் ஆப்கனில் இருந்து வெளியேறி பிரிட்டன் நாட்டிற்குச் செல்லும் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது விமானம் வான்வெளியில் சுமார் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனை அடுத்து விமான ஊழியர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் பிறந்த குழந்தைக்கு ஹாவே என்று பெயரிடப்பட்ட தாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் பிரிட்டன் விமான நிலையத்தில் இறங்கிய உடன் தாய் மற்றும் அவரது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.