பெண்களைக் கொன்று “நாய்க்கு“ வீசுவார்கள்? தாலிபான் குறித்து பகீர் தகவலை வெளியிட்ட பெண்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. இந்நிலையில் தாலிபான்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அவர்கள் பெண்களுக்கு இழைத்த அச்சுறுத்தலை பற்றி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தற்போது ஊடகத்திடம் தகவல் தெரிவித்து உள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் காவல் துறையில் பணியாற்றி வந்த கதேரா எனும் இளம்பெண் பணிக்குச் சென்று திரும்பியபோது தாலிபான்கள் அவரை வழியில் நிறுத்தி அச்சுறுத்தி இருக்கின்றனர். இந்நிலையில் கதேரா தன்னுடைய அடையாள அட்டையைக் காண்பித்து இருக்கிறார். இதனால் மேலும் கோபம் அடைந்த தாலிபான்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதோடு கத்தியை வைத்து அவருடைய கண்ணைத் தோண்டி எடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தின்போது கதேரா 2 மாதக் கர்ப்பிணியாக இருந்தாராம். இந்தச் சம்பவத்தினால் படுகாயம் அடைந்த அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று தற்போது ஆப்கானை விட்டு நம்முடைய டெல்லியில் வசித்து வருகிறார்.
தனக்கு நடந்த அனுபவத்தைத் தற்போது பகிர்ந்து கொண்ட கதேரா, தாலிபான்கள் முதலில் பெண்களை கட்டுப்படுத்த முயற்சிப்பார்கள். அடுத்து அவர்களை கொடுமைப் படுத்துவார்கள். பின்பு மற்ற பெண்களை பயமுறுத்துவதற்காக பெண்களை கொன்று அவர்களுடைய உடல் பாகங்களை நாய்களுக்கு வீசுவார்கள்.
தாலிபான்கள் ஆட்சியில் பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் வசிப்பது நரகத்திற்கு சமமான விஷயம். நான் எப்படியோ நாட்டைவிட்டு தப்பித்து வந்துவிட்டேன். ஆனால் 20 வருடங்களாக ஆப்கன் பெண்கள் கண்டுவந்த ஒட்டுமொத்த கனவும் தற்போது சுக்கு நூறாக உடைந்திருக்கிறது எனக் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.
இந்நிலையில் ஆப்கன் நாட்டு பெண்களின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கும் கதேரா தாலிபான்களின் உண்மை முகம் ரொம்பவே கொடூரமானது எனத் தெரிவித்துள்ளார். இவருடைய கருத்துத் தற்போது பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com