என் தாயகமே உனக்கு ஏன் வேதனை? ஆப்கன் வலியை வரிகளாய் வடித்துவிட்ட பாடகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆப்கானிஸ்தானில் இன்னும் ஒரு சில தினங்களில் தாலிபான்கள் ஆட்சி அமைக்கவுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க படைகள் முழுக்க அந்நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றன. இதனால் ஆப்கானிஸ்தான் மக்களை இனி அந்த கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று பல உலகத் தலைவர்கள் முதற்கொண்டு கருத்துக் கூறி வருவது பலரையும் மலைக்க வைத்துள்ளது.
இந்நிலையில் “என் தாயகமே வேதனையால் நீ சோர்வடைந்து போய் உள்ளாய், என் தாயகமே வலித்தும் அதை ஆற்றுவதற்கான மருந்து இல்லாமல் நிற்கிறாய்” என்பது போன்ற வரிகளை அமைந்து அந்த நாட்டு பிரபல பாடகர் ஒருவர் பாடல் அமைத்துள்ளார். இந்தப் பாடலை தன்னுடைய தோழர்களுடன் பாடிய வீடியோ காட்சி தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது.
ஏற்கனவே தாலிபான்களுக்கு அஞ்சி அமெரிக்காவில் தஞ்சும் புகுந்து இருக்கும் பிரபல பாடகர் ஷரஃபத் பர்வானி என்பவர் பாடி வெயிட்ட இந்தப் பாடல் வரிகள் தற்போது ஆப்கன் மக்களின் ஒவ்வொருவரின் மனதையும் உருக்கி வருகிறது. அதோடு ஷரஃபத் பர்வானி வெளியிட்ட ஆப்கன் நாட்டைப் பற்றிய இந்தப் பாடல் ஆப்கானை விட்டு வெளியேறிய பலரின் இதயத்தை சுக்குநூறாக்கி இருக்கிறது.
மேலும் அங்கேயே அல்லல்பட போகும் பல லட்சக்கணக்கான பெண்கள், குழந்தைகளின் நிலைமை என்னவாகும் என்பவே இந்த வலிக்கும் வேதனைக்கும் முக்கியமான காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Your tired of anguish, my homeland
— Sharif Hassan (@MSharif1990) August 29, 2021
Your without song and melody, my homeland
Your pained but without medicine, my homeland
Sharafat Parwani, a popular singer who was recently evacuated, sings the song somewhere in a military base or refugee camp in the US.#Afghanistan pic.twitter.com/EoIVS7bPmz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments