ஆப்கானிஸ்தானில் பிரபல நடிகைமீது துப்பாக்கிச் சூடு!!! பரபரப்பான பின்னணி!!!

  • IndiaGlitz, [Wednesday,August 26 2020]

 

கடந்த சில தினங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரபல நடிகை ஒருவர் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் குறித்து எந்தவிதத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. திரைப்பட நடிகை மற்றும் பிரபல இயக்குநரான சபா சாஹர் காபூலில் உள்ள தனது வீட்டில் இருந்து பாதுகாவலர்களுடன் காரில் சென்றபோது இச்சம்பவம் நடைபெற்றதாக அவரது கணவர் இமால் சகி தெரிவித்து உள்ளார்.

சபா சாஹர் திரைப்படங்களில் மட்டுமல்லாது பெண்களின் உரிமைக்களுக்காக குரல் கொடுப்பவர் என்றும் அந்நாட்டின் அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு சபா சாஹர் காவல் துறையினருக்கான பயிற்சியையும் எடுத்துக் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் ஒரு குழந்தை, 2 பாதுகாவலர்கள் மற்றும் ஓட்டுநருடன் சாலையில் செல்லும்போது மர்மநபர்கள் அக்காரின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் குழந்தை மற்றும் ஓட்டுநருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் சபா சாஹர் மற்றும் பாதுகவாலர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது சபா சாஹர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பு குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. சபா சாஹரின் வெளியிட்ட ஒருசில ஆவணப் படங்களால் அந்நாட்டில் நடைபெற்ற லஞ்சம், ஊழல் போன்ற பல்வேறு குற்றங்கள் பொது வெளிக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய காரணங்களால் அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு இருக்கலாமோ என்ற அடிப்படையில் தற்போது விசாரணை நடத்தப் படுபவதாகவும் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் செயற்பாட்டாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், சமூகநல ஆர்வலர்கள்மீது இப்படி தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாகத் தற்போது பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.