நாளை ரிலீஸாகவுள்ள நிலையில் 'ஏலே' படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ‘ஏலே’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீசாக இருந்தது. இந்த நிலையில் இந்த படம் வரும் 28ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இயக்குனர் ஹலிதா சமீம் கூறியதாவது...
என்னுடைய “ஏலே” திரைப்படம் மிகப்பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களை சென்றடையவுள்ளது என்பதில் பெரும் மகிழ்ச்சி. இயக்குநராக எனது பயணம் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே “ஏலே” என் மனதிற்கு நெருக்கமான படைப்பாக இருந்தது. தற்போது மிகப்பெரும் வெளீயீடாக பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களை ஒரே நாளில் என் படம் சென்றடைவதை, காண மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இத்தகைய புதிய தளத்தை மிகப்பெரும் எண்ணிக்கையிலான ரசிகர் கூட்டத்திடம் உலகம் முழுதும் இத்திரைப்படத்தை வெளியிடும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்கு எனது நன்றிகள்.
ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ விபாசிஸ் சர்கார் கூறியதாவது...
“ஏலே” படம் குடும்பங்கள் கொண்டாடூம் திரைப்படம் ஆகும். மனதை வருடம் இந்த அழகான படைப்பினை பார்வையாளர்களின் இல்லங்களுக்கே கொண்டு செல்வதில் பெருமை கொள்கிறோம். தொலைக்காட்சியின் பலத்தையும் அதன் பிரமாண்டத்தையும் நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். ஸ்டார் விஜய் தொலைக்காட்சியுடன் இந்த மிகப்பெரும் திரைப்பட வெளியீட்டில் பங்கு கொள்வதில் மகிழ்ச்சி.
வால்வாட்சர் பிலிம்ஸ் சார்பில் புஷ்கர் & காயத்திரி கூறியதாவது...
ஒரு நல்ல சினிமா, அதன் பார்வையாளர்களை ஏதாவது ஒரு வகையில் கண்டிப்பாக சென்றடையும் என்பதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கியுள்ள “ஏலே” திரைப்படம் எங்களது வால்வாட்சர் பிலிம்ஸ் சார்பில் உருவாகும் முதல் படைப்பு மேலும் எங்களுக்கு மிகவும் நெருக்கமான படைப்பு. மனதிற்கு இதமான இத்திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் எளிதில் கவரும். ஸ்டார் விஜய் உடைய நேரடியான தொலைக்காட்சி சிறப்பு திரையிடல், இந்த அழகான திரைப்படத்தை உங்கள் இல்லங்களுக்கே எடுத்துவரவுள்ளது. துணிவு மிகுந்த இந்த புதிய நடைமுறை படைப்பாளிகளுக்கும் கதை சொல்லிகளுக்கும் பல புதிய கதவுகளை திறக்கும்.
#Aelay Exclusive World Premiere on @vijaytelevision !
— Y Not Studios (@StudiosYNot) February 11, 2021
Tune in on Feb 28 at 3PM #AelayFromFeb28 #AelayOnVijayTV@thondankani @halithashameem @sash041075 @PushkarGayatri @chakdyn @Shibasishsarkar @StudiosYNot @RelianceEnt @wallwatcherfilm @APIfilms @SonyMusicSouth @SureshChandraa pic.twitter.com/enctipEZTw
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments