கட்சியில் இருந்து விலகியது ஏன்? கமல் முன் தெளிவுபடுத்திய வழக்கறிஞர் ராஜசேகர்
- IndiaGlitz, [Tuesday,April 24 2018]
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வழக்கறிஞர் ராஜசேகர் விலகினார் என்ற செய்தி இன்று காலையில் இருந்து அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தது. இந்த செய்தியை வழக்கறிஞர் ராஜசேகரும் மறுக்கவில்லை
இந்த நிலையில் இன்று சென்னையில் கமல்ஹாசன் நடத்திய மாதிரி கிராமசபைக்கு வழக்கறிஞர் ராஜசேகரும் வந்திருந்தார். அவர் தான் ஏன் கட்சியில் இருந்து விலகினேன் என்பதற்கு விளக்கம் அளித்தார்.
கமல்ஹாசன் காலை முதல் இரவு வரை கட்சிக்காக வெறித்தனமாக வேலை செய்து கொண்டிருக்கின்றார். அவருடைய வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை. அதேபோல் என்னுடைய வழக்கறிஞர் தொழிலையும் நான் கவனிக்க வேண்டியதிருப்பதால் கட்சிப்பணி ஆற்ற முடியாத நிலையில் உள்ளேன். அதனால் கமல்ஹாசனிடம் நேரில் என்னுடைய நிலையை தெரிவித்துவிட்டு கட்சியில் இருந்தும் விலகுகிறேன், இருப்பினும் கமல்ஹாசன் தான் என்னுடைய தலைவர் அதில் மாற்று கருத்து இல்லை என்று வழக்கறிஞர் ராஜசேகர் கூறினார்.
இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், வழக்கறிஞர் என்று இல்லை எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் முதலில் உங்கள் தொழிலை கவனித்து விட்டு பகுதி நேரமாக அரசியல் பணி செய்யுங்கள், அரசியலை தொழிலாக நினைத்து செய்ய வேண்டாம்' என்று கூறினார்.