கமல் கட்சியில் இருந்து விலகிய பிரபலம்: மேலும் சிலர் விலகுவதாக தகவல்

  • IndiaGlitz, [Tuesday,April 24 2018]

நடிகர் கமல்ஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய நிலையில் அக்கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான ராஜசேகர் இன்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

வழக்கறிஞர் ராஜசேகர் மூலமாகத்தான் கமல் கட்சியில் முன்னாள் காவல் அதிகாரி மவுரியா, ஸ்டார் ஜெராக்ஸ் சௌரிராஜன் உட்பட பலர் இணைந்ததாகவும் அவர்கள் அக்கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென கருத்துவேறுபாடு காரணமாக வழக்கறிஞர் ராஜசேகர் கமல் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கமல் கட்சியில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும் அதனால் கட்சியில் இருந்து விலகுவதாகவும் வழக்கறிஞர் ராஜசேகர் கூறியுள்ளார். இந்த நிலையில் வழக்கறிஞர் ராஜசேகரை தொடர்ந்து மேலும் சில பிரபலங்கள் அக்கட்சியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

More News

மன்சூர் அலிகான் ஜாமீன் மனு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை விசாரணை செய்த செங்கல்பட்டு நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மும்பை ஆசிரமத்தில் ஒரு மாதம் இருந்தாரா நிர்மலாதேவி?

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கும் நிர்மலாதேவி, கடந்த சில வருடங்களுக்கு முன்னர்

சானியா மிர்சாவுக்கு கிடைக்கும் புதிய பதவி

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கர்ப்பமாக இருப்பதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை விட்டே சென்றுவிடுவேன்: ஞானவேல்ராஜா கூறியது ஏன்?

முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் ஞானவேராஜா. இவரது தயாரிப்பில் அல்லு அர்ஜூன் நடித்த '‘என் பெயர் சூர்யா... என் வீடு இந்தியா’ என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது

சென்னையில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரி தற்கொலை!

சென்னையில் கடந்த சில நாட்களாக காவல் துறையை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.