தினகரனுக்கு கிடைக்காதது நிர்மலாதேவியின் வக்கீலுக்கு கிடைத்துவிட்டதே!

ஆர்.கே.நகரில் இரட்டை இலை மற்றும் உதயசூரியனை வீழ்த்திய ராசியான குக்கர் சின்னத்தை பெற டிடிவி தினகரன் சுப்ரீம் கோர்ட் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தினார். ஆனால் அவருக்கு இந்த விஷயத்தில் தோல்வியே கிடைத்தது. இருப்பினும் அவரது கட்சி வேட்பாளருக்கு பரிசுப்பெட்டி என்ற பொதுச்சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது

இந்த நிலையில் மதுரை மக்களவை தொகுதியில் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் என்பவர் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இவர்தான் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பேராசிரியை நிர்மலாதேவியின் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்ரீம் கோர்ட் சென்றும் பெற முடியாத குக்கரை வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் மிக எளிதாக பெற்றுவிட்டார்.

முன்னதாக குக்கர் சின்னத்தை யாருக்கும் வழங்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் டிடிவி தினகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, குக்கர் சின்னம் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

அன்னை சோனியா காந்தி பிரதமரா! நீங்களுமா ஸ்டாலின்?

தேர்தல் நேரத்தில் அரசியல் தலைவர்கள் பலர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒருசிலர் வாய்தவறி தவறான தகவல்களை அளித்து வருவதும், தலைவர்கள் பேசும் பேச்சை நெட்டிசன்கள் கலாய்த்து வருவதும் .

கோவை சிறுமி கொலை: பெற்றோருக்கு ஆறுதல் கூறிய கமல்ஹாசன்

கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது

'நம்ம ஊரு தொழிலாளிகள்': விஜய்யின் பாசம்

பெரிய ஸ்டார்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் நடைபெறுவது வழக்கம். ஏனெனில் படப்பிடிப்பு நடக்கும்போது

ரஜினி படத்தை ஆரம்பிக்கும் முன் ஏ.ஆர்.முருகதாஸ் சென்ற இடம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்திலும் நடித்து முடித்தவுடன் திருப்பதி சென்று அந்த படத்தின் வெற்றிக்காக வழிபடுவதுண்டு. அந்த வகையில்

கணவனை கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் கணவரை கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.