'விக்ரம்' படத்துடன் ரிலீஸாக இருந்த பிரபல நடிகர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தின் இறுதிகட்ட புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ’விக்ரம்’ படத்தின் ரிலீஸ் தேதியான ஜூன் மூன்றாம் தேதி அன்று ரிலீசாக இருந்த பிரபல நடிகரின் படம் ஒன்றின் ரிலீஸ் தேதி ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் ராஜீவ் ரவி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'துரமுகம்’ {Thuramukham ). இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 3 என அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 10ஆம் தேதி என மாற்றப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து கேரளாவில் ’விக்ரம்’ திரைப்படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கேரளாவில் ’விக்ரம்’ திரைப்படத்தை 370 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 100 முதல் 200 திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.