விஜய்க்கு அட்வான்ஸ் வாழ்த்து கூறிய தனுஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய்யின் பிறந்த நாள் நாளை தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இன்றில் இருந்தே அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் இன்று நடிகர் தனுஷ், விஜய்க்கு தனது அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கடின உழைப்பாளி, அர்ப்பணிப்பு உணர்வு, மிகச்சிறந்த மனித நேயம் கொண்டவரும், நான் மிகவும் மதிக்கும் ஒருவருமான விஜய் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என்று தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று மாலை 6 மணிக்கு விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளிவரவுள்ளது. எனவே இன்றும் நாளையும் சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Wishing a very happy birthday to vijay sir .. a very hardworking ,dedicated amazing human being whom I admire a lot.Thank u sir.For being u.
— Dhanush (@dhanushkraja) June 20, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com