ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்- வழக்கு பதிவு செய்த பள்ளித்தோழி

  • IndiaGlitz, [Wednesday,December 21 2016]

முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் கடந்த டிசம்பர் 5 அன்று மரணம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில் அவரது புகைப்படம் கூட வெளியிடப்படவில்லை. எனவே ஜெயலலிதா மரணத்தைச் சுற்றிப்ப பல்வேறு சந்தேகங்களும் மர்மங்களும் பல்வேறு தரப்பினரால் எழுப்பபட்டுவருகின்றன.

இந்நிலையில் வழக்கறிஞர் கீதா என்பவர், இதுகுறித்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் தன்னை ஜெயலலிதாவின் பள்ளித்தோழி என்று கூறிக்கொள்கிறார்

வழக்கறிஞர் கீதா தன்னுடைய மனுவில் கூறியிருப்பதாவது ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசின் பல்வேறு முக்கியஸ்தர்கள் மற்றும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினர் விசாரிக்கப்பட வேண்டும் என்றுகோறியுள்ளார். .


வழக்குப்பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கீதா நானும் ஜெயலலிதாவும் பள்ளிக் காலத்திலிருந்து நண்பர்களாக இருக்கிறோம். அவரின் திடீர் மரணம் எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனால்தான் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளேன்' என்று கூறியுள்ளார்.