2000 ஆபாச படங்களில் நடித்த ஆபாச பட நடிகருக்கு 90 வருடங்கள் ஜெயில்? அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
2000க்கும் அதிகமான ஆபாச திரைப்படங்களில் நடித்த 67 வயது நடிகர் ஒருவருக்கு 90 வருடங்கள் வரை ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஆபாசப்பட நடிகை ரான் ஜெர்மி என்பவர் கடந்த 1970 ஆம் ஆண்டுகளில் ஆபாச படங்களில் நடித்தார். இதுவரை இவர் 2000க்கும் அதிகமான ஆபாச படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
67 வயதான ரான் ஜெர்மி, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான ஐந்து வருடங்களில் சுமார் நான்கு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்கள் 25 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு 25 வயது பெண் ஒருவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரை மூன்று பெண்களை அவர் வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்த வழக்கு ரான் ஜெர்மி மீது பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 90 வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் கூறுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ரான் ஜெர்மி கூறும்போது ’தான் இதுவரை ஒரு பெண்ணையும் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை’ என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments