அடல்ட் இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
'ஹரஹர மகாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டுக்குத்து' ஆகிய இரண்டு அடல்ட் படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் சமீபத்தில் ஆர்யா நடித்த 'கஜினிகாந்த்' என்ற 'யூ' சான்றிதழ் படத்தையும் இயக்கினார். இவர் இயக்கிய மூன்று படங்களும் வசூல் அளவில் வெற்றியை பெற்றுள்ள நிலையில் தற்போது அடுத்த படத்தையும் அவர் தொடங்கவுள்ளார்.
சந்தோஷ் ஜெயகுமார் இயக்கும் 4வது படத்தையும் ஸ்டுடியோக்ரீன் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. பாலமுரளி பாலு இசையில், பிரசன்னா படத்தொகுப்பில் பாலு ஓளிப்பதிவில் என அவருடைய வழக்கமான டீம் களமிறங்கும் இந்த படத்திற்கு 'ஸ்டார்ட் கேமிரா ஆக்சன்' என்ற டைட்டில் வைத்திருப்பதாக தெரிகிறது.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Thank u God. started rolling my next .. #StartCameraAction @ballu_1987 @editor_prasanna @balubm @kegvraja @BlueGhost_Pic pic.twitter.com/fmxk5y9wOM
— Santhosh PJayakumar (@santhoshpj21) September 3, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments