'சார்பாட்டா பரம்பரை': இயக்குனர் ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி உள்பட பலர் நடித்த ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் ஒரு சில அரசியல்வாதிகளும் தங்களது ஆதரவை தெரிவித்தார்கள் என்பதும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் எம்ஜிஆர் குறித்து சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக அதிமுக ஏற்கனவே குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இ ’சார்பாட்டா பரம்பரை’ படம் தொடர்பாக இயக்குனர் பா ரஞ்சித் அவர்களுக்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் ஒரு வரலாற்று படம் என்று கூறிவிட்டு உண்மைக்கு மாறான செய்திகள் மக்களிடத்தில் பரப்பப்பட்டு உள்ளது என்றும் இயக்குனர் ரஞ்சித் உண்மைக்கு புறம்பானவை என்று ஒத்துக் கொள்ளாவிட்டால் அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.