பிரச்சாரத்தின்போது அதிமுக எம்.பி. முகமது ஜான் உயிரிழப்பு… அதிர்ச்சி சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக மாநிலங்களவை எம்.பியான முகமது ஜான் இன்று ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மதிய உணவு எடுத்துக் கொண்ட அவர் பின்னர் மீண்டும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் அப்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து மயங்கி விழுந்த அவரை வாலாஜா பகுதியில் உள்ள அரசு மருத்துமனையில் அனுமதித்து உள்ளனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் முகமது ஜான் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்து உள்ளனர். இந்தச் சம்பவத்தால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
முகமது ஜான் கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு ஜெயலலிதா இருந்தபோது அவரது அமைச்சரவையில் சிறுபான்மையினத் துறை அமைச்சராகவும் பங்கு வகித்து இருக்கிறார். இந்நிலையில் வாலாஜா பேட்டையில் அதிமுக வேட்பாளர் சுகுமாறனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருப்பது பலருக்கும் அதிர்ச்சி அளித்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments