ஓபிஎஸ்-க்கு குவியும் ஆதரவு. மூன்று 130 ஆக மாறுவது எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
தற்போதுள்ள அரசியலை விறுவிறுப்பான கிரிக்கெட் ஆட்டத்திற்கு ஒப்பிட்டால், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ஓபிஎஸ் அபார வெற்றி பெற்றுள்ளார் என்று கூறலாம். சசிகலாவுக்கு 130 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது என்று கூறப்பட்டு வந்தாலும், தற்போது ஓபிஎஸ் அவர்களுக்கு வெளிப்படையாகவே மூன்று எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொடுத்துவிட்டனர். இந்த மூன்று இன்னும் ஒருசில நாட்களில் 130 ஆக மாறும் என்று உண்மையான அதிமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்த அதிமுக ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் கூறியதாவது:
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவரான பன்னீர்செல்வத்தை, அவரே இருமுறை முதல்வராக நியமித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு தான் அனைவரும் ஆதரவு அளிப்பார்கள். அ.தி.மு.க.,வில் பெரும்பாலான எம்.எல்.ஏக்களின் ஆதரவு பன்னீர்செல்வத்திற்கு தான் உள்ளது' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com