அதிமுக எம்.எல்.ஏக்கள் கடத்தலா? எம்.எல்.ஏக்களுடன் செல்லும் 2 பேருந்து எங்கே ?

  • IndiaGlitz, [Wednesday,February 08 2017]

இன்று காலை அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் நடந்தது.

ஆனால் இந்த கூட்டம் முடிந்த பின்னர் சசிகலா செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இந்த கூட்டத்தில் என்ன ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்தும் அதிகாரபூர்வமான தகவல் இல்லை. மேலும் இந்த கூட்டத்தில் 45 எம்.எல்.ஏக்கல் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் 2 பேருந்துகளில் அழைத்துச் செல்லப்படுவதாகவும், அவர்கள் எங்கு அழைத்து செல்லப்படுகின்றனர் என்ற விபரம் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கடத்தப்பட்டு கவர்னர் சென்னை வரும் வரை ரகசிய இடத்தில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.