வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிப்பு: பேருந்தை இயக்கி அசத்திய அந்தியூர் எம்.எல்.ஏ

  • IndiaGlitz, [Friday,January 05 2018]

தமிழகத்தில் நேற்று மாலை முதல் போக்குவரத்து ஊழியர்கள் திடீரென முன்னறிவிப்பு இன்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர். தினககூலி அடிப்படையில் ஆட்கள் எடுக்கவும் போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பத்து சதவிகித பேருந்துகள் கூட இயங்கவில்லை

இந்த நிலையில் பொதுமக்களின் அவதியை நேரில் பார்த்த அந்தியூர் எம்.எல்.ஏ ராஜாகிருஷ்ணன், அந்தியூர் பேருந்து நிலையத்திற்கு வந்து பயணிகளை ஏற்றி தானே பேருந்தை இயக்கினார். அவர் அந்தியூரில் இருந்து பவானி வரை சென்று பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பவானியில் இருந்து அந்தியூர் வந்தார். வரும் 8ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ளதால் அதுவரை பேருந்தை இயக்க தயார் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

முன்னதாக காவல்துறை அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ ராஜாகிருஷ்ணன் தனது ஓட்டுனர் உரிமையை காண்பித்து அவர்களின் அனுமதி பெற்ற பின்னரே பேருந்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.