மணப்பெண் கிடைத்தும் தள்ளி வைக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ திருமணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பவானிசாகர் அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கும் சந்தியா என்ற 23 வயது இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு செப்டம்பர் 12ஆம் தேதி திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 1ஆம் தேதி திடீரென மணமகள் சந்தியா மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சந்தியாவின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தியாவை தேடிய போலீசார் அவர் திருச்சியில் இருப்பதை கண்டுபிடித்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
நீதிமன்றத்தில் தனக்கும் எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கும் 20 வயது வித்தியாசம் இருப்பதால் தனக்கு இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை என்று சந்தியா கூறினார். இதனையடுத்து சந்தியாவை கட்டாயப்படுத்தி திருமணம் செய்யக்கூடாது என்று நீதிபதி நிபந்தனை விதித்து அவரது பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தார்
இந்த நிலையில் குறிப்பிட்ட அதேதேதியில் வேறு பெண்ணுடன் திருமணம் நடைபெறும் என்று எம்.எல்.ஏ ஈஸ்வரன் கூறினார். அவர் கூறியபடியே வேறு மணமகளும் நிச்சயிக்கப்பட்டார். இருப்பினும் பெண் வீட்டார் திருமணத்திற்கு தயார் நிலையில் இல்லாததால் இன்று நடைபெறவிருந்த திருமணம் ஐப்பசி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments