மேலும் ஒரு தமிழக எம்எல்ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல் 

கொரோனோ வைரஸ் ஏழை முதல் பணக்காரர் வரை, பாமரர் முதல் பதவியில் இருப்பவர் வரை ஜாதி மத இன வேறுபாடின்றி தாக்கி வருகிறது என்று தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் சேப்பாக்கம் எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவிலேயே ஒரு எம்எல்ஏ ஒருவர் கொரோனாவுக்கு பலியானது ஜெ.அன்பழகன் தான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் கே பழனி என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இதனை அடுத்து எம்.எல்.ஏ கே.பழனி அவர்கள் போரூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதிமுக எம்எல்ஏ கே.பழனி அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருடைய குடும்பத்தினர் உறவினர்கள் ஓட்டுநர் உள்பட அவர்கள் வீட்டில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்ய தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது