சசிகலாவை பார்க்க பெங்களூர் சிறையை நோக்கி விரைந்த அமைச்சர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை பார்க்க மூத்த அமைச்சர்கள் விரைந்துள்ளனர்.
சசிகலா ஆதரவு முதல்வரான எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்த 122 எம்.எல்.ஏக்களுக்கும் பொதுமக்களின் எதிர்ப்பு வலுத்து கொண்டே போகிறது. பல எம்.எல்.ஏக்கள் சொந்த ஊர் திரும்பாமல் சென்னையிலேயே உள்ளனர். சொந்த ஊருக்கு சென்ற ஒருசில எம்.எல்.ஏக்கள் மக்களால் விரட்டியடிக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்களை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சந்தித்து தனது அணிக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக தலைமை நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டி ஆலோசனை செய்தது
இந்நிலையில் இன்று காலை அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மாவட்ட செயலாளர்களை தக்க வைத்து கொள்ளவும், ஓபிஎஸ் அணியின் நடவடிக்கைகளை சமாளிக்கவும் அவர்கள் சசிகலாவிடம் ஆலோசனை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout