அதிமுகவின் இந்த தீர்மானங்கள் சாத்தியமா?

  • IndiaGlitz, [Thursday,December 29 2016]

இன்று காலை நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் மறைந்த தமிழக முதல்வர் பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாட வலியுறுத்தி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் முன்னாள் பிரதமர் சரண்சிங் அவர்களின் பிறந்த நாளான டிசம்பர் 23ஆம் தேதியை ஏற்கனவே பல ஆண்டுகளாக தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சரண்சிங் பிரதமராக இருந்தபோது விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார். இதன் காரணமாக இவருடைய பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ஆதரவான கட்சி என்று கூறப்படும் அதிமுக, விவசாயிகள் தினம் ஒன்று இருப்பதே தெரியாமல் இந்த தீர்மனத்தை நிறைவேற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று இன்னொரு தீர்மானம் கூறுகிறது. ஆனால் 1974ஆம் ஆண்டுக்குப் பிறகு, மறைந்த ஒருவரின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படுவது இல்லை. ஒரு வேளை, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு, பரிசு வழங்கப்படுவதற்கு முன்பே, அவர் இறந்துவிட்டால் மட்டுமே, அந்த பரிசு அவரது பெயரில் வழங்கப்படும். எனவே இந்த தீர்மானமும் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்றே கூறப்படுகிறது.

More News

பொதுச்செயலாளர் பதவியை ஏற்க சம்மதம். முதல்வருடன் ஜெ. நினைவிடம் செல்கிறார் சசிகலா

இன்று காலை அதிமுக பொதுக்குழு கூடி ஒருமனதாக அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் சசிகலா என்று தீர்மானம் நிறைவேற்றியது...

விக்ரம்-ஹரி இணையும் 'சாமி 2' வதந்திக்கு முற்றுப்புள்ளி

சீயான் விக்ரம் நடித்த 'இருமுகன்' வெற்றி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விரைவில் விக்ரமுடன் இணைந்து 'சாமி 2'...

எனது கணவரை காணவில்லை. சசிகலா புஷ்பா திடுக்கிடும் புகார்

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் சசிகலா கலந்து கொள்ளவில்லை...

பிரபல நடிகை இறந்த மறுநாளே அவரது தாயாரும் மறைந்த சோகம்

ஸ்டார் வார்ஸ் உள்பட பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்த புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை கேர்ரி ஃபிஷர் நேற்று மரணம் அடைந்தார்...

இன்று ரஜினி-ரஞ்சித் சந்திப்பு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய வசூலை தந்த படமாக இருந்து...