"தேனிலவே இன்னும் முடியல, அதுக்குள்ளே"....! சர்ச்சை நாயகன் செல்லூர் ராஜா பேச்சு....!
Send us your feedback to audioarticles@vaarta.com
"திமுக-வின் ஆட்சியில் இன்னும் தேனிலவே முடியல, ஆனால் அதுக்குள்ளே ரவுடிசம் தொடங்கியாச்சு" என்ற செல்லூர் ராஜாவின் பேச்சு புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதிமுக-வில் முக்கிய புள்ளியாகவும், பலம் பொருந்தியராகவும் இருப்பவர் செல்லூர் ராஜு. அவ்வப்போது பேட்டிகளில் பேசி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வார். தற்போது திமுக ஆட்சியை ஓபிஎஸ் உட்பட பல அதிமுக நிர்வாகிகளும், பாராட்டி வருகிறார்கள். ஆனால் ஜெயக்குமார், எடப்பாடி பழனிச்சாமி மட்டும் திமுக-வை குறை சொல்லி வருகிறார்கள். இவர்கள் பட்டியலில் தற்போது செல்லூர் ராஜுவும் இணைந்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு அதிமுக-வின் மறைமுக பிரச்சனைகள் குறித்தும், திமுக-வின் ஆட்சி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, "அரசு கூட்டங்களில் கட்சியில் உள்ள, யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். ஓபிஎஸ் மற்றும் ஈபிஸ் இரட்டைக் குழல் துப்பாக்கி போன்றவர்கள், எங்கள் கட்சிக்குள் எந்த பிரச்சனையும்இல்லை, ஆட்சி நன்றாகவே நடந்து வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நோயாளிகளே இல்லாமல் இருந்ததால் தான், ஆக்சிஜன் தேவை இல்லாமல் இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் நோய் காரணமாக மக்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மதுரை மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் குறைவாகத்தான் வந்துள்ளது, அரசிடம் அதிக தடுப்பூசிகளை கேட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பள்ளிக்கூடங்கள் திறக்காமல் உள்ளது, அதனால் அங்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் ஊரடங்கும் கைகொடுத்துள்ளது, மக்களும் ஓரளவிற்கு குணமாகி வருகிறார்கள். பணம் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுவதால், முதல்வர் கூடுதல் தொகையாக ரூ.5000 கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும், அதிகாரிகளிடம் நாங்கள் தனிப்பட்ட முறையில் பேச மாட்டோம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததால் ரவுடிசம் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. திமுகவில் உள்ள ஒரு பிரமுகர் தலையீடு காரணமாகவே, ஜெய்ஹிந்த்புரம் ஆய்வாளர் இடம்மாற்றப்பட்டுள்ளார். அதிகாரிகளுக்கு இனி மிரட்டல், உருட்டல் தொடரும். திமுக ஆட்சிக்கு வந்து, இன்னும் தேனிலவே முடியல, அதுக்குள்ளே ரவுடிசம் தலைதூக்குகிறது" என்று கூறி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் செல்லூரார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout