அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தேர்தல் அறிக்கை வெளியான சில நிமிடங்களில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் தற்போது வெளிவந்துள்ளது. ஆனால் இரு தேர்தல் அறிக்கைகளையும் ஒரே குழு தயாரித்தது போல் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கல்விக்கடன் ரத்து, நீட் விவகாரம், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாற்றுவது, ராஜீவ் கொலையாளிகளுக்கு விடுதலை ஆகியவை உள்பட ஒருசில அம்சங்கள் இரண்டு தேர்தல் அறிக்கைகளிலும் உள்ளது.
இந்த நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்:
* அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 வழங்கப்படும்
* உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பை பெறும் வண்னம் காலத்திற்கேற்ற பயிற்சி எம்.ஜி.ஆர் தேசிய வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு திட்டம்
* மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்
* கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
* விவசாய கடன் சுமையை நீக்கும் வகையில் புதிய திட்டம்
* காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்
* நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
* நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும்
* வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை தடுத்து வறட்சியின் போது பயன்படுத்த திட்டம் கொண்டுவரப்படும்
* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தப்படும்
* புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
* வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பகுதிகளுக்கு நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்
* மதம் மாறினாலும் சாதிரீதியான இடஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க சட்டம் இயற்ற நடவடிக்கை
* இலங்கை இன படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி சட்டப்பூர்வ நடவடிக்கை
* தமிழ்மொழியை மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல்மொழியாக்க நடவடிக்கை
* இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க புதிய அமைப்பு ஒன்று தேசிய அளவில் உருவாக்கிட வலியுறுத்தப்படும்
* காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்
* காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம்
* தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு
* மேற்குதொடர்ச்சி மலையில், பருவமழைக் காலங்களில் பெறும் நீரை பயன்படுத்த தடுப்பணை, நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments