அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட இருப்பதாக அதிமுக தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருவரும் அதிமுக தலைமைக் கழகத்திற்கு வருகை தந்தனர். மேலும் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் தலைமை கழகத்தில் வந்து சேர்ந்தனர்
இதனை அடுத்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிக்கப்பட்டார். இதனை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்தார். அதுமட்டுமின்றி அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டிக் குழுவும் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வழிகாட்டு குழுவில் இருக்கும் நபர்களின் பெயர்கள் வருமாறு: திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம், காமராஜ், ஜேசிடி பிரபாகரன், மனோஜ்பாண்டியன், ப. மோகன், கோபாலகிருஷ்ணன், சோழவந்தான் மாணிக்கம் ஆகியோர் ஆவார்கள்.
இதனை அடுத்து கடந்த சில நாட்களாக அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சைக்கு முடிவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கழகத்தின் முதல்வர் வேட்பாளர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் - கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஒ. பன்னீர்செல்வம் அவர்கள் அறிவிப்பு.
— AIADMK (@AIADMKOfficial) October 7, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com