சகோதரி கனிமொழிக்கு வாக்களியுங்கள்: வாய்தவறி உளறிய அதிமுக வேட்பாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தூத்துகுடி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழியை தோற்கடிக்க அதிமுக-பாஜக கூட்டணி பல்வேறு வியூகங்கள் அமைத்து வரும் நிலையில் அதிமுக வேட்பாளர் ஒருவர் கனிமொழிக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துகுடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று விளாத்திகுளம். இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக வேட்பாளராக சின்னச்சாமி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார். விளாத்திகுளத்தில் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமாறு பிரச்சாரம் செய்த சின்னச்சாமி, பின் தூத்துகுடி பாராளுமன்ற தேர்தலில் சகோதரி கனிமொழிக்கு வாக்களியுங்கள் என்று வாய்தவறி பேசினார். இதனால் தேர்தல் பிரச்சாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின் சுதாரித்து கொண்ட சின்னச்சாமி, சகோதரி தமிழிசைக்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.
ஏற்கனவே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன், திண்டுக்கல் தொகுதியில் பாமகவின் மாங்கனி சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என்று கூறுவதற்கு பதில் பாஜகவின் தாமரை சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என்று கூறி பாஜக பிரமுகர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com