ஜெயலலிதா ஜெயலலிதாதான்! பொதுகுழு விருந்தில் புலம்பி தள்ளிய உறுப்பினர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெயலலிதா இருந்தபோது பொதுக்குழு கூடுகிறது என்றால் விருந்து சாப்பாடு தடபுடலாக இருக்கும். மட்டன் கறி, வஞ்சிர மீன் என அசைவ சாப்பாடு வாயில் எச்சில் ஊற வைக்கும். கட்சிக்காரர்களை சாப்பாடு விஷயத்தில் திருப்திப்படுத்த ஜெயலலிதா போல் யாராலும் முடியாது என்பது இன்றைய விருந்துக்கு பின்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது
இன்று பொதுக்குழு முடிந்தவுடன் உறுப்பினர்கள் அனைவரும் ஏசி பஸ் மூலம் ஸ்டார் ஓட்டல் ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஜெயலலிதா இருக்கும்போது கிடைத்த வகைவகையான அசைவ சாப்பாட்டை மனதில் வைத்து சென்றவர்களுக்கு பெரும் ஏமாற்றம். அங்கு உறுப்பினர்களுக்கு பரிமாறப்பட்டது சுத்த சைவ சாப்பாடு.
வெஜிடபுள் பிரியாணி, சாதத்துடன் சாம்பார், ரசம், மோர், தயிர், வடை, பால் பாயசம், ஒரு அவியல், கேரட், பீன்ஸ் பொரியல், கிழங்கு வறுவல், அப்பளம், ஜாங்கரி, ஜஸ்க்ரீம், பாதாம் பால், வாழைப்பழம் ஆகிய வகைகள் பரிமாறப்பட்டாலும் ஜெயலலிதா போட்ட அசைவ விருந்துக்கு ஈடாகாது என்று பலர் சோகத்தில் புலம்பியது அனைவருக்கும் கேட்கும் வகையில் இருந்தது. சசிகலாவுக்கு எதிராகவும், முதல்வருக்கு ஆதரவாகவும் முடிவெடுக்க ஒத்துழைத்ததால் இன்று வகை வகையான கவனிப்புடன் அசைவ சாப்பாடு இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்ததாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments