ஜெயலலிதா கோவில்முன் தீக்குளித்த தொண்டர் பரிதாபமாக உயிரிழப்பு!

  • IndiaGlitz, [Wednesday,March 17 2021]

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த அதிமுக தொண்டர் பழனிசாமி(57). இவர் சந்தையூர் வாக்குச்சாவடிக்கு தன்னை முகவர் பணிக்கு சேர்த்துக் கொள்ளுமாறு அங்குள்ள அதிமுக கட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் பழனிசாமி தகராறும் செய்துள்ளார்.

ஆனால் இறுதிவரை இவரை முகவர் பணிக்கு கட்சி நிர்வாகம் சேர்த்துக் கொள்ளாததை அடுத்து கடந்த 14 ஆம் தேதி பழனிசாமி டி.குன்னத்தூர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா கோவில் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார். மேலும் கடுமையான காயத்தடன் கோவிலில் மயங்கி விழுந்தும் இருக்கிறார். இதைப் பார்த்த கட்சி நிர்வாகிகள் பழனிசாமியை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

இதையடுத்து பழனிசாமிக்கு கடந்த சில தினங்களாக தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தே.கல்லுபட்டி போலீசார் இதை வழக்காகப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிககள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

எதிர்கட்சிகளை பார்த்து கமல் சொன்ன அந்த வார்த்தை......! பதறிப்போன இருபெரும் கட்சி தலைகள்..!

மக்கள் நீதி  மய்யத்தின் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் சிறிய கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சி

பூரண மதுவிலக்கு முதல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவது வரை- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 

தமிழகத்தில் வரும் ஏப்ரல்-6ஆம்  தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கே.எல்.ராகுலுக்கு தொடரும் நெருக்கடி? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டி20 போட்டியில் கே.எல்.ராகுல் இடம் பெறுவாரா? என நேற்று போட்டித் தொடங்குவதற்கு முன்பு வரை  விவாதம் செய்யப்பட்டது.

'ரஜினி' டைட்டிலில் ஒரு படம்: 15 ஆண்டுகளுக்கு பின் இணைந்த தயாரிப்பாளர்-இயக்குனர்

15 ஆண்டுகளுக்குப் பின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீண்டும் இணைந்த திரைப்படத்திற்கு 'ரஜினி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

தேர்தல் துளிகள்: 17 மார்ச் 2021

நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிடுகிறார்.