இந்தியாவின் பணக்கார கட்சிகள்: அதிமுகவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- IndiaGlitz, [Saturday,March 10 2018]
இந்தியாவில் தடுக்கி விழுந்தால் கூட பத்து கட்சிகள் இருந்தாலும் ஒருசில கட்சிகளே இந்திய அளவிலும் மாநில அளவிலும் புகழ் பெற்று விளங்குகின்றன. இந்த நிலையில் டெல்லியில் இயங்கி வரும் ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு ஒன்று நாட்டில் இருக்கும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சிகளில் பணக்கார கட்சி எது என்ற சர்வே ஒன்றை எடுத்து அதன் முடிவுகளை சற்று முன் வெளியிட்டுள்ளது.
இதன்படி இந்தியாவின் பணக்கார கட்சி பாஜகவோ அல்லது காங்கிரஸோ அல்ல, உபியில் இருக்கும் மாநில கட்சியான சமாஜ்வாடி கட்சியே. இந்த கட்சியின் சொத்து மதிப்பு 2011-12ம் ஆண்டில் 212.86 கோடியாக இருந்த நிலையில், 2015-16ம் நிதியாண்டில் ரூ.635 கோடியாக உயர்ந்துள்ளது. இது 198% வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுக என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவின் சொத்து மதிப்பு கடந்த. 2011-12ல் ரூ.88.21 கோடியாக இருந்தது. ஆனால் இந்த சொத்து மதிப்பு 2015-16ல் ரூ.224.87 ஆக உயர்ந்துள்ளது. இதன் சொத்துமதிப்பு வளர்ச்சி 155% என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு கட்சிகளும் கட்சியின் வளர்ச்சியில் காட்டும் அக்கறையை மாநிலத்தில் வாழும் மக்களின் வளர்ச்சியில் காட்ட வேண்டும் என்பதே அனைவரின் ஆசை.