விமர்சனங்களுக்கு தக்கப் பதிலடி… சமூகவலைத் தளத்தில் பாராட்டுகளைக் குவித்து வரும் தமிழக முதல்வர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பரவல், நீட் தேர்வு போன்ற விவகாரங்களில் தமிழக அரசு பெரும் தவறிழைத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தக்கப் பதிலடி கொடுத்துள்ளார். இதனால் சமூக வலைத்தளங்களில் தமிழக முதல்வர் அதிகம் கொண்டாடப்படும் நபராக மாறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கொரோனா வைரஸ் பரவலைக் கையாளுவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டிவருகிறது என்ற கடுமையான குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வந்தன. ஆனால் இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்யும் மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமே தகவல் தெரிவித்து உள்ளது. அதைத்தவிர கொரேனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுவதாகச் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.
மேலும் கொரோனா தாக்கத்தால் தமிகழத்தின் பொருளாதார வருவாய் முற்றிலும் குறைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் அடுத்த குற்றச்சாட்டை தெரிவித்து இருந்தன. ஆனால் கொரோனா நேரத்திலும் இந்திய அளவில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது என தரவுகள் வெளியாகி இந்தக் குற்றச்சாட்டுக்கும் தற்போது முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதைத்தவிர நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு, மத்திய அரசுக்கு சாதகமாகச் செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வு முறையை ஆரம்பித்து வைத்ததே எதிர்க்கட்சியோடு கூட்டணி வைத்து இருக்கும் கட்சித்தான், மேலும் நீட்தேர்வுக்கு ஆதரவாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் வாதாடினார்கள் என்ற தகவலை மிகவும் ஆக்ரோஷத்தோடு தமிழக முதல்வர் எடபப்டி பழனிசாமி சட்டமன்றக் கூட்டத்தொடரில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நீட் தேர்வு விவகாரம் குறித்து சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய தமிழக முதல்வரின் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் கடும் வைரலை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக அரசு பெரும் தவறு இழைத்துவிட்டதாகக் கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை. மேலும் நீட்டுக்கு எதிராகவே அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது என்பதையும் தமிழக முதல்வர் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தெளிவுப்படுத்தினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout