அதிமுக, திமுகவுக்கு டென்ஷனை தரும் செப்டம்பர் 5
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒருபக்கம் செப்டம்பர் 5ஆம் தேதி அமைதிப்பேரணியை நடத்தவுள்ளதாக மு.க.அழகிரி அறிவித்துள்ளதால் திமுக தரப்பில் டென்ஷனும், இன்னொரு பக்கம் 18 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளதால் அதிமுக தரப்பில் டென்ஷனும் ஏற்பட்டுள்ளது.
கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள், விசுவாசிகள் சுமார் ஒரு லட்சம் பேர் தனது அமைதிப்பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று மு.க.அழகிரி அறிவித்துள்ளார். அவர் கூறியபடி ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டால் நிச்சயம் இந்த அமைதிப்பேரணி திமுகவில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தும்.
அதேபோல் 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு டிடிவி தினகரனுக்கு சாதகமாக வந்தால் முதல்வர் ஈபிஎஸ் ஆட்சி ஆட்டம் காணும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த தீர்ப்பு யாருக்கு பாதகமாக வந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
இருப்பினும் செப்டம்பர் 5ஆம் தேதி அதிமுக, திமுக என இரு கட்சிகளையும் டென்ஷனை ஏற்படுத்தும் நாள் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments