தேர்தல் 2019: அதிமுக-திமுக நேரடியாக மோதும் தொகுதிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தேர்தல் 2019: அதிமுக-திமுக நேரடியாக மோதும் தொகுதிகள்
வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகள் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகின்றன. மீதி 20 தொகுதிகளை இரண்டு கட்சிகளுமே கூட்டணி கட்சிகளுக்கு தாரை வார்த்துள்ளன. இந்த நிலையில் இந்த 20 தொகுதிகளில் அதிமுக-திமுக நேரடியாக மோதும் தொகுதிகள் வெறும் 8 தொகுதிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எட்டு தொகுதிகளையும், அதன் அதிமுக, திமுக வேட்பாளர்களையும் தற்போது பார்ப்போம்.
1. தென்சென்னை: அதிமுக வேட்பாளர்: ஜெயவர்தன்
திமுக வேட்பாளர்: தமிழச்சி தங்கபாண்டியன்
2. காஞ்சிபுரம்: அதிமுக வேட்பாளர்: மரகதம் குமரவேல்
திமுக வேட்பாளர்: செல்வம்
3. திருவண்ணாமலை: அதிமுக வேட்பாளர்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி
திமுக வேட்பாளர்: அண்ணாதுரை
4. பொள்ளாச்சி: அதிமுக வேட்பாளர்: C. மகேந்திரன்
திமுக வேட்பாளர்: சண்முகசுந்தரம்
5. திருநெல்வேலி: அதிமுக வேட்பாளர்: மனோஜ் பாண்டியன்
திமுக வேட்பாளர்: ஞான திரவியம்
6. மயிலாடுதுறை: அதிமுக வேட்பாளர்: S ஆசைமணி
திமுக வேட்பாளர்: ராமலிங்கம்
7. நீலகிரி: அதிமுக வேட்பாளர்: M தியாகராஜன்
திமுக வேட்பாளர்: ஆ.ராசா
8. சேலம்: அதிமுக வேட்பாளர்: KRS சரவணன்
திமுக வேட்பாளர்: பார்த்திபன்
8 தொகுதிகளில் மட்டும் அதிமுக-திமுக வேட்பாளர்கள் நேரடி போட்டியில் இருந்தாலும் இரு கூட்டணியிலும் உள்ள ஒருசில கட்சிகள் இரட்டை இலை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் இரட்டை இலையும் உதயசூரியனும் 11 தொகுதிகளில் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments