அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்: அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,February 19 2019]

இன்று காலை அதிமுக கூட்டணியில் 7 மக்களவை தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை தொகுதிகளையும் பாமக பெற்றுள்ள நிலையில் சற்றுமுன் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சென்னை வந்து அதிமுக தலைவர்களுடன் கூட்டணி குறித்த இறுதி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

மேலும் பாராளுமன்ற தேர்தலுடன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிக்கும் என பியூஷ் கோயல் மற்றும் துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி அளித்தனர்.

 

More News

ஐபிஎல் போட்டியின் அட்டவணை: முதல் போட்டியில் சென்னை-பெங்களூர் மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திருவிழா இந்த ஆண்டு வரும் மார்ச் மாதம் 23ஆம் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியும் மோதவுள்ளது.

பெங்களூரில் நேருக்கு நேர் மோதிய 2 விமானங்கள்: விமானிகள் காயம்

பெங்களூரில் சர்வதேச விமானத் தொழில் கண்காட்சி நாளை தொடங்கி வரும் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் பல்வேறு சாகச காட்சிகள் நடைபெறவுள்ள நிலையில்

அர்ஜூன் ரெட்டி ரீமேக்கில் இணைந்த தந்தையும் மகனும்!

சீயான் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் பாலா இயக்கிய அர்ஜூன் ரெட்டி ரீமேக் படமான 'வர்மா' திரைப்படம் கைவிடப்பட்ட நிலையில் தற்போது புதிய டீமுடன் இந்த படத்தை மீண்டும் உருவாக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

அமேசான் போட்ட ஒரே ஒரு டுவீட்: ஆத்திரத்தில் அஜித் ரசிகர்க்ள்!

அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் சூப்பர்ஹிட்டாகி இன்னும் சென்னை உள்பட பல நகரங்களில் வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கின்றது.

ஒரு எம்.பி நிச்சயம்: பாமகவு கூட்டணி குறித்து நடிகை கஸ்தூரி கருத்து

அதிமுக கூட்டணியில் பாமக ஏழு மக்களவை தொகுதிகளையும் ஒரு மாநிங்களையும் தொகுதியும் பெற்றுள்ளது என்பதை சற்றுமுன் பார்த்தோம். கூட்டணி ஒப்பந்தத்திற்கு பின் டாக்டர் ராமதாஸ்