'சொடக்கு' பாடலுக்கு தடை கோரி அதிமுக நிர்வாகி புகார்!

  • IndiaGlitz, [Friday,January 05 2018]

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாடலான 'சொடக்கு மேல சொடக்கு போட்டு' என்ற பாடலுக்கு தடைகேட்டு அதிமுக நிர்வாகி ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சொடக்கு பாடல் இளைஞர்களிடயை வன்முறையை தூண்டும் வகையில் இடம் பெற்றுள்ளதால் இந்த பாடலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகி சதீஷ்குமார் என்பவர் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த பாடலை கம்போஸ் செய்த இசையமைப்பாளர், படத்தயாரிப்பாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்

இந்த பாடலில் 'கரைவேட்டி, வெள்ளைச்சட்டை போட்டவனைப் பாத்தா வெரட்டி வெரட்டி வெளுக்கத் தோணுதுன்னு' என்ற வரி உள்ளது. இந்த வரிக்கு ஏற்கனவே ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதிமுக நிர்வாகி புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பொங்கல் ரேஸில் இருந்து விலகிய பிரபல நடிகரின் திரைப்படம்

வரும் பொங்கல் திருநாளில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்', விக்ரமின் 'ஸ்கெட்ச்', அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல், சண்முகபாண்டியனின் 'மதுரவீரன், மற்றும் பிரபுதேவாவின் 'குலேபகாவலி'

வித்தக கவிஞரின் வித்தியாசமான ஆக்சன் திரில்லர் படம்

'இளைஞன்' படத்தை அடுத்து பாடலாசிரியர் பா.விஜய் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'ஆருத்ரா'.

பஸ் ஸ்டிரைக்: விஷாலுக்கு ஏற்பட்ட அச்சம்

நேற்று மாலை முதல் தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் அறிவிக்கப்படாத திடீர் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கமல் வீட்டிற்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு ஏன்?

உலக நாயகன் கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டிற்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொங்கலுக்கு அரசு தரும் விலைமதிப்பில்லா பரிசு: பஸ் ஸ்டிரைக் குறித்து கமல்

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய போக்குவரத்து ஊழியர்களிடம் நேற்று தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நேற்று மாலை முதல் அறிவிக்கப்படாத