கோவையில் கொரோனா அறிகுறிகளுடன் 3 பேர் அனுமதி..!

கோவையில் வெளிநாடுகளில் இருந்து வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டதனால் அவர்கள் தனிமையில் வைக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் மலேசியாவில் வேலை பார்த்து வந்திருக்கிறார். அங்கு இருக்கும் போது உடல் நலம் சரியில்லாமல் போன காரணத்தால் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக கோவை ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இருமல், காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருப்பதால் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சளி மற்றும் இரத்த மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

அதே போல் சார்ஜாவிலிருந்து கோவை விமான நிலையம் வந்த கேரள இளைஞருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறிப்பட்டு மருத்துவமனையில் தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பங்களாதேஷிலிருந்து கோவை மேட்டுப்பாளையத்திற்கு வேலைக்கு வந்திருக்கும் இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தெரிந்து கோவை பொது மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

More News

கொரோனா கோரம்: டாய்லட் பேப்பருக்காக அடித்துக்கொண்ட வாடிக்கையாளர்கள் வைரலான வீடியோ!!!

கொரோனா மனித உயிர்களை எடுத்துக் கொள்வது மட்டுமின்றி அது ஏற்படுத்திய பீதியால் மனித நேயத்தையும்  கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

கொரோனாவில் இருந்து தப்பிக்க கள்ளச்சாராயம் குடித்த 27 பேர்களின் பரிதாப முடிவு

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க மது அருந்தலாம் என்ற வதந்தியை நம்பி ஈரானில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

தனுஷின் 'ஜகமே தந்திரம்' ரிலீஸ் குறித்த தகவல்

அசுரன், பட்டாஸ் ஆகிய இரண்டு வெற்றி படங்களை அடுத்து தனுஷ் தற்போது 'ஜகமே தந்திரம்' மற்றும் 'கர்ணன்' ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டார்.

கொரோனா இருக்கட்டும்.. பெங்களூரில் 6 பேருக்கு காலரா..!

விப்ரியோ காலரே என்ற பாக்டீரியாவின் மூலம் மனிதர்களுக்கு காலரா நோய் ஏற்படுகிறது. அசுத்தமான உணவு மற்றும் குடிநீர் மூலம் இந்த பாக்டீரியாவானது மனிதர்களின் உடலுக்குள் செல்லும்

'வருகிறார் வாத்தி': 'மாஸ்டர்' படத்தின் புதிய அப்டேட்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன