பிக்பாஸ் முடிஞ்சிருச்சு, அடுத்த வேலையை பாருங்கள்.. ஏடிகே டுவிட்..!

  • IndiaGlitz, [Wednesday,February 08 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் சக போட்டியாளர்கள் குறித்து இழிவாக ஊடகங்களில் பேட்டி அளிப்பதை விட்டுவிட்டு அடுத்த வேலையை கவனியுங்கள் என பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் விக்ரமனுக்கு இரண்டாவது இடம் கிடைத்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஏடிகே, 98 நாட்கள் வரை தாக்கு பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் குறை கூறி ஊடகங்களில் பேட்டி அளித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஏடிகே தனது சமூக வலைதளத்தில் ’ஊடகங்களில் நேர்காணல் செய்யும் போது சக போட்டியாளர்களை இழிவு படுத்த வேண்டாம், சக போட்டியாளர்கள் மீது நீங்கள் குறை கூறுவதை விட்டுவிட்டு உங்களுடைய வேலை குறித்த விளம்பரத்திற்காக மீடியாவை பயன்படுத்திக் கொள்ளுங்கள், நிகழ்ச்சி முடிந்து விட்டதால் எதார்த்த நிலைக்கு செல்லுங்கள்’ என்று கூறியுள்ளார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழ் எல்லாம் அடுத்த சீசன் வரைக்கும் தான் என்று தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்துக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.