'நான் அந்த புள்ளையை தங்கச்சி மாதிரி நினைச்சிருந்தேன்': ஏடிகே ஆவேசமானது ஏன்?

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கின்றது என்பதும் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கும் வகையில் புரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் ஜனனி பேசிய ஒரே ஒரு வார்த்தை, சக போட்டியாளரான ஏடிகேவை டென்ஷனாக வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று நடைபெறும் ஒரு டாஸ்க்கில், ‘இந்த வீட்டில் நல்லவர் என்ற முகமூடியை அணிந்திருக்கும் நபர் யார்? என்று பிக்பாஸ் கேள்வி கேட்கிறார். அதற்கு ஜனனி, ‘ஏடிகே’  என்று கூறுகிறார். இதைக்கேட்ட டென்ஷன் ஆன ஏடிகே, ஜனனியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

ஒரு கட்டத்தில், ‘உங்களுடன் பேசுவதற்கு எதுவும் எதுவும் இல்லை என்று ஏடிகே கூற அதற்கு ஜனனி, ‘உங்ககிட்ட பேச எதுவும் இல்லை என்று நீங்கள் சொல்ல தேவை இல்லை’ என்று கூறுகிறார். இதனால் ஆத்திரமடையும் ஏடிகேன், ‘ஜனனியை நான் அவ்வப்போது அழைத்து அட்வைஸ் பண்ணுவேன். அவர் மீது நான் ஒரு மிகப்பெரிய அன்பு வைத்திருக்கிறேன். அந்த அன்பை கொச்சைப் படுத்திவிட்டீர்கள். நான் அவரை ஒரு தங்கச்சி மாதிரி பழகி வந்தேன். இந்த வீட்டில் உள்ள யார் மீதும் அவ்வளவு அன்பு நான் வைத்தது இல்லை, அந்த புள்ளைமீது நான் அவ்வளவு பாசம் வைத்துள்ளேன், அப்படிப்பட்ட என்னை நல்லவன் என்று முகமூடி அணிந்து இருப்பதாக கூறி விட்டாரே’ என ஆவேசமாக பேசினார்.

இதை பார்த்து ஜனனி ஒரு நிமிடம் ஆடி போயுள்ளார். இதனை அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

More News

தனலட்சுமிக்கு தண்டனை கொடுங்க.. பிக்பாஸிடம் முறையிடும் பெண் போட்டியாளர்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக எந்த சண்டை வந்தாலும் அதில் தனலட்சுமி இருக்கிறார்

'மிரள்'  படத்தை மலேசியாவில்  வெளியிடும் பிரபல நிறுவனம். 

Axess Film Factory G டில்லி பாபு தயாரிப்பில், M சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் “மிரள்”. புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.

யோவ் கேமிராமேன் போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணியிருக்கய்யா: யாஷிகாவின் பதிவுக்கு வேற லெவல் கமெண்ட்!

நடிகை யாஷிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த நெட்டிசன் ஒருவர் 'யோவ் கேமராமேன், போன ஜென்மத்துல நீ ஏதோ புண்ணியம் பண்ணி இருக்கய்யா, நல்லா இரு' என கமெண்ட் பதிவு செய்திருப்பது பரபரப்பை

ஹார்லிக்ஸில் விஷம்… மனைவியின் பலே திட்டத்தால் பதறிப்போன கணவன்!

ஹார்லிக்ஸில் விஷம் வைத்து, தனது மனைவியே தன்னைக் கொலை செய்யப் பார்த்தார்

அட்லிக்கு கல்யாணமாகி இத்தனை வருஷமாச்சா? செம ரொமான்ஸ் பதிவு!

பிரபல இயக்குநர் அட்லியின் திருமண நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அட்லியின் மனைவி கிருஷ்ண பிரியா பதிவு செய்துள்ள செம ரொமான்ஸ் புகைப்படம் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.