சூப்பர் ஹிட் படத்தின் 2 ஆம் பாகத்தில் அதிதி ஷங்கர்? பிரபல இயக்குனரின் மாஸ் திட்டம்..!

  • IndiaGlitz, [Wednesday,July 26 2023]

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக்கப்பட இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி ஆக நடிக்க அதிதி ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் ரவிகிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் உருவான திரைப்படம் ’7ஜி ரெயின்போ காலனி’. யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஎம் ரத்னம் தயாரிப்பில் உருவான இந்த படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.



இந்த நிலையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முதல் பாகத்தை இயக்கிய செல்வராகவன் இந்த படத்தை இயக்கும் நிலையில் முதல் பாகத்தில் நடித்த ரவிகிருஷ்ணா இந்த படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். அதேபோல் முதல் பாகத்திற்கு இசையமைத்த யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தில் நாயகி ஆக நடித்த அதிதி ஷங்கர், இவானா உள்பட ஒரு சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிதி ஷங்கர் இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 

More News

40 ஆண்டுகால ஹாலிவுட் நண்பரை சந்தித்த கமல்ஹாசன்.. இணைந்து பணியாற்றிய மலரும் நினைவுகள்..!

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்கா சென்று உள்ள நிலையில் அங்கு அவர் 40 ஆண்டு கால ஹாலிவுட் நண்பரை  சந்தித்ததாகவும், இருவரும் இணைந்து பணிபுரிந்த மலரும் நினைவுகளை பகிர்ந்த

யாரும் எதிர்பாராத டிவிஸ்ட்.. குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவரா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி இறுதி கட்டத்திற்கு வந்துள்ள நிலையில் வரும் சனி ஞாயிறு கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது

100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த,  “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”: ZEE5 தளத்தில் சாதனை

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில்,  நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில்  உருவான ஆக்சன் கமர்ஷியல்  திரைப்படமான   “காதர்

ஒருவழியாக உறுதியாகிறது 'குற்றப்பரம்பரை'.. இயக்குனர் யார் தெரியுமா?

நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி எழுதிய 'குற்றப்பரம்பரை' என்ற நாவலை படமாக்க இயக்குனர் மையம் பாரதிராஜா மற்றும் இயக்குனர் பாலா போட்டி போட்ட நிலையில் தற்போது ஒரு வழியாக இந்த படம் உருவாக

செம்ம ஸ்மார்ட்டான கெட்டப்புக்கு மாறிய விஜய் சேதுபதி.. இந்த படத்திற்காகவா?

நடிகர் விஜய் சேதுபதி ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனது கெட்டப்பை மாற்றி மிரட்டி வருகிறார் என்பதும் குறிப்பாக சமீபத்தில் வெளியான 'ஜவான்' படத்தின் கெட்டப்[ மிரள வைத்தது என்பதும் தெரிந்ததே