'விருமன்' கேரளா புரமோஷன்: வேற லெவல் கிளாமரில் அதிதிஷங்கர்!

கார்த்தி, அதிதிஷங்கர் நடித்த 'விருமன்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.

குறிப்பாக மதுரையில் நடந்த 'விருமன்’ இசை வெளியீட்டு விழாவின் பிரமாண்டத்தை பார்த்து திரையுலக பிரமுகர்கள் ஆச்சரியமடைந்தனர். அது மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் பட குழுவினர் நேரில் சென்று புரமோஷன் செய்து வருகின்றனர்.



அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் நடந்த 'விருமன்’ புரமோஷன் விழாவில் கார்த்தி, அதிதிஷங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதில் நாயகி அதிதி ஷங்கர் கிளாமர் உடையில் வந்து கலக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’மாவீரன்’ திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அதிதிஷங்கர், விரைவில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் திரையுலகில் கூறி வருகின்றனர்.