சூர்யாவுக்கு வாழ்த்து சொல்லி, யுவனுடன் செம ஆட்டம் ஆடிய அதிதி ஷங்கர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மதுரையில் நேற்று ’விருமன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் சூர்யாவுக்கு வாழ்த்து கூறிய இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், மேடையிலேயே யுவனுடன் செம ஆட்டம் போட்டது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான ’விருமன்’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மதுரையில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில் கார்த்தி, அதிதிஷங்கர், ஷங்கர் குடும்பத்தினர், பாரதிராஜா, யுவன் ஷங்கர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்
இந்த விழாவில் பேச வந்த அதிதிஷங்கர், தேசிய விருது வாங்கிய சூர்யாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மேலும் கார்த்தி, முத்தையா உள்பட படக்குழுவினர் அனைவரும் தன்னை ஒரு அறிமுக நடிகை போல் பார்க்கவில்லை என்றும் தனக்கு நிறைய அனுபவங்களை சொல்லிக் கொடுத்தார்கள் என்றும் கூறினார்
மேலும் 2டி நிறுவனம் என்னை அவர்களுடைய குடும்பத்தினர் போலவே நடத்தியது என்றும் அதற்காக சூர்யா, ஜோதிகா ஆகியோர்களுக்கு தனது நன்றி என்றும் அவர் கூறினார். மேலும் நான் சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்று கூறியவுடன் என்னுடைய அப்பா அம்மா இருவருமே எனக்கு நம்பிக்கை அளித்து ஊக்கம் அளித்தார்கள் என்றும் என்னுடைய சினிமா எண்ட்ரி வேண்டுமானால் அப்பாவின் ஆதரவால் இருக்கலாம் என்றும் ஆனால் அடுத்தடுத்த வளர்ச்சி என்னுடைய கடின உழைப்பின் மூலம் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார்
இதனை அடுத்து யுவன் சங்கர் ராஜாவை மேடைக்கு அழைத்த அதிதிஷங்கர், அவருடன் இணைந்து ’விருமன்’ படத்தின் பாடலை பாடி செம ஆட்டம் போட்டது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com